“டுவிட்டர் புளூ டிக் வசதி”…. மாதம் எவ்வளவு கட்டணம்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை கடந்த வருடம் அக்டோபர் இறுதியில் தன்வசப்படுத்தினார். எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரான பிறகு தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இப்போது  அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் பயன்படுத்துகின்றனர். அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என உறுதிபடுத்திகொள்ள ஏதுவாக, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகே சரி என குறிக்கும் அடிப்படையில் நீலநிற டிக்(புளூ டிக்) குறியீடு இருக்கும்.

இந்த புளூ டிக்கிற்காக பயனர்களிடம் ஒவ்வொரு மாதமும் ரூ.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது என முதலில் ஒரு தகவல் வெளியாகியது. இதற்கு பல தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் விலையை உயர்த்தி பின் குறைக்கும் வர்த்தக யுக்தியாக, டுவிட்டர் புளூ டிக்கிற்கு இனிமேல் மாதம் 8 டாலர் (660 இந்திய ரூபாய் மதிப்பு) கட்டணம் வசூல் செய்யப்படவுள்ளது என எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டார். சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருந்த இத்திட்டம் பிறகு தள்ளிபோனது. இச்சூழலில் டுவிட்டரில் புளூ டிக்கை பெறுவதற்கு ஏற்ற அடிப்படையில் சந்தா தொகையை அந்நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வ முறையில் அறிமுகம் செய்துள்ளது.

இதுவரையிலும குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே இந்த கட்டணம் செலுத்தி டுவிட்டரில் சந்தாதாரர்களாக ஆவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. இப்போது இந்திய பயனாளர்களும் ஒரு மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்துக்கொள்ளலாம். அந்த வகையில் சரிபார்க்கப்பட்ட மொபைல் எண்களை கொண்ட சந்தாதாரர்களுக்கு புளூடிக் அடையாளம் அவரது முகப்புப்பக்கத்தில் கிடைக்க பெறும்.