பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தை…. தாய்க்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம் பாளையம் வள்ளுவர் நகரில் அன்பழகன் – பாரதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் அன்பரசன் பில்டிங் கன்ஸ்டிரக்ஷன் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகின்றார். இவர்களுக்கு திருமணமாகி 2 1/2 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் பாரதி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணி ஆன அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எனவே பிரசவத்திற்காக பாரதியை கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இதனையடுத்து பாரதிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து பாரதியின் மாமனார் காளியப்பன் அருகிலுள்ள வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாரதியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல் துறையினர் பாரதியின் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *