20 ஆண்டுகள் ”வேலையால் வந்த வினை” சிக்கிய கொலை குற்றவாளி…!!

வேலைக்கு விண்ணப்பித்ததால் 20 ஆண்டுகளுக்கு பின் கொலைக்கான குற்றவாளி சிக்கி கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

1998_ஆம் ஆண்டில் அமெரிக்கா நாட்டின் புளோரிடா நகரில் 68 வயதான மூதாட்டி சோண்ட்ரா  மர்மமான முறையில் ஒரு கடையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.இந்த கொலைக்கு என்ன காரணம் , யார் காரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த இரத்த மாதிரி , கைரேகை என துப்புதுலங்கியும் முக்கியமான ஆதாரம் ஏதும் கிடைக்காமல் கடைக்கு ஒரு நபர் வந்ததற்கு பின் இந்த கொலை நடைபெற்றது என்று மட்டுமே போலீஸ் கண்டு பிடித்தனர்.கொலையாளியின் முக அடையாளம் ஏதும் கிடைக்காததால் 20 ஆண்டுகளாக குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தவித்து வந்த நிலையில் ,

வேலைக்கு விண்ணப்பித்ததன் விளைவாக 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட நபர்

தீடீர் திருப்பமாக குற்றவாளி சிக்கியுள்ளார்.மருத்துவமனையில் செவிலியர் பணிக்காக 51 மதிக்கத்தக்க பார்கட்  என்பவர் விண்ணப்பித்துள்ளார். அவரின் வேலை உறுதியான நிலையில் அந்த மருத்துவமனை நிர்வாகம் அவரிடம் கை ரேகை உட்பட பிற ஆவணங்களை அனுப்ப சொல்லியுள்ளது. அதில் பார்கட்  அனுப்பிய கைரேகை கொலையாளிக்கான கைரேகையுடன் ஒத்து போனது.இதையடுத்து டிஎன்ஏ மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி போலீஸார் விசாரித்ததில் பார்கட் கொலையை ஒத்துக்கொண்டுள்ளார். வேலைக்கு  விண்ணத்து குற்றவாளி சிக்கிக்கொண்ட சம்பவம்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.