டி.வி.எஸ் யின் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் … இந்தியாவில் விற்பனை ஆரம்பம் ..!!

இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் என்ற  புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது .

இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் மோட்டார் சைக்கிள் வைட் மட்டும்  பிளாக் என டூயல் டோன் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் மாடல் மோட்டார் சைக்கிளில் பிரீமியம் டூயல்-டோன் சீட், டூயல்-டோன் மிரர், ரெட் நிற டீக்கல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், ஸ்பெஷல் எடிஷன் லோகோவும் வழங்கப்பட்டுள்ளது.

Image result for டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல்

மேலும், டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் ஆட்டோ ஹெட்லைட் ஆன், ஹனிகாம்ப் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட சைடு பேனல்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மஃப்ளர், அலுமினியம் கிராப் ரெயில்கள், பிளாக் நிற அலாய் வீல்கள், அழகிய டெயில் லைட்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி.எஸ்.ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலிலும் முந்தைய மாடலில் உள்ள 110 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜினே வழங்கப்பட்டுள்ளது.

Image result for டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல்

இந்த என்ஜின் 8.2 பி.ஹெச்.பி. @7000 ஆர்.பி.எம். மற்றும் 8.7 என்.எம். டார்க் @5000 ஆர்.பி.எம். செயல்திறனை வழங்குகிறது. இத்துடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோட்டார் சைக்கிளின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் 5-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டூயல் ஷாக் அப்சார்பர்களும்,  பிரேக்கிங்கிற்கு 110 எம்.எம். டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷனின் விலை ரூ. 53,437 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.