கேரள மழை வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்குங்கள் என்ற கேரள முதல்வரின் வேண்டுகோளை தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்கள் நிறைவேற்றியுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் கனமழை பெய்தது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.

மூன்று நாட்களில் மட்டும் பெய்த கனமழையால் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் உரிழந்தவர்களின் எண்ணிக்கை 127-ஆக அதிகரித்து , 21 பேரை காணவில்லை என்றும் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்தியது.இதையடுத்து கேரள மக்களுக்கு பலரும் உதவி புரிந்து வருகின்றனர். இதற்க்கு ஏற்றார் போல அம்மாநில முதல்வர் பினராய் விஜயன்_னும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் வெள்ளம் கேரளத்தை ருத்ரதாண்டவம் ஆடிய போது கேரளாவுக்கு தமிழகம் துணையாக நின்றது. கேரளா மக்களுக்காக தமிழகத்தில் பள்ளி , கல்லூரி மாணவர்கள் , பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் , அரசியல் கட்சிகள் என அனைவரும் கேரளவுக்காக நிவாரண உதவி மேற்கொண்டனர். தமிழகத்தின் இந்த உதவிக்கு நெகிழ்ந்து போன கேரளா அரசு கஜா புயலின் போது டெல்ட்டா மாவட்டத்தை தாங்கி பிடித்தது.
இந்நிலையில் தற்போது கேரளத்தை வெள்ளம் மூழ்கடித்துள்ள நிலையில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தன்னுடைய ட்வீட்_டர் பக்கத்தில் கடந்த 13-ஆம் தேதி அடுத்தடுத்து 5 ட்வீட் தமிழில் பதிவிட்டு உதவியை கோரி இருந்தார்.அதை தொடர்ந்து 19_ஆம் தேதியும் கேரளாவுக்கு உதவியை கோரி தமிழக மக்கள் உதவுவார்கள் என்ற தன்னபிக்கையுடன் தமிழில் ட்வீட் பதிவிட்டார்.
கேரளா மக்களின் நிவாரண பணிகளை மேற்கொள்ள கேரள முதல்வர் மேற்கொள்ளும் இந்த முயற்சிகளை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டினர்.இவரை போல முதல்வர் அனைவருக்கும் வேண்டுமென்று பதில் ட்வீட் பதிவிட்டு வாழ்த்தினார்.இந்நிலையில் கேரள முதல்வரின் நம்பிக்கை வீணாக வில்லை என்பதை உணர்த்தி இருக்கின்றது தமிழக கல்லூரி மாணவர்கள் செய்த நிவாரணம். ஆம் கேரள முதல்வரின் கோரிக்கையை தமிழக கல்லுரி மாணவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தாலுகாவில் உள்ள நாகலாபுரம் என்ற சிறிய கிராமத்தில் உள்ளது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி 800_க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் இந்த கல்லூரி சமீப காலமாக மக்களின் நல் மதிப்பை பெற்று வருகின்றது. அங்குள்ள கல்லூரி மாணவர்கள் பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டு கல்விக்கான மகத்துவத்தை நிரூபித்து வருகின்றனர்.
தமிழகத்தில் என்ன பிரச்சனை நடந்தாலும் குறிப்பாக சமீபத்தில் கஜா புயல் டெல்டா பகுதி மக்களை சூறையாடியது. அப்போதும் இந்த மாணவர்கள் வீடு வீடாக சென்று மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சேகரித்து டெல்டா பகுதி மக்களிடம் கொண்டு சேர்த்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது கேரள மழை வெள்ளத்தின் கொடூர பிடியில் சிக்குள்ள மக்களை காக்க அம்மாநில முதல்வரின் வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றியுள்ளது மனோ கல்லூரி.
கேரள மக்களுக்காக வீடு வீடாக சென்று , கடை கடையாக ஏறி இறங்கி நிவாரண வசூல் செய்துள்ளனர். அந்த கல்லூரியில் உள்ள NSS சார்பில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இந்த வசூலில் அக்கல்லூரி NSS ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுரேஷ்பாண்டியும் பங்கேற்று மாணவர்களின் நிவாரண சேகரிப்பில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். மூன்று நாட்களுக்காக நடைபெற்ற இந்த நிவாரண தொகையை நேரடியாக கேரள முதல்வரை சந்தித்து நேற்று முன்தினம் வழங்கி உள்ளனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச்செயலகத்திக்கு சென்ற NSS ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுரேஷ்பாண்டி தலைமையிலான குழுவில் கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி , பேராசிரியர் டார்வின் ,மாணவர் பேரவை தலைவர் வெற்றிவேல் ,கருப்பசாமி ,முத்துப்பாண்டி, லோகநாயகி , விஜயலக்ஷ்மி, லெனின் , வீர சுதாகர் , லட்சுமி பிரியா ஆகியோர் சென்று கேரள முதல்வரிடம் நிவரான தொகை ரூ 30,000 வழங்கி முதல்வர் பினராய் விஜயனின் வாழ்த்தையும் , பாராட்டையும் பெற்றுள்ளனர்.
மாணவர்களின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த கல்லூரியில் பொருளாதார துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் முனைவர் எஸ்.சுரேஷ்பாண்டி அவர்களின் முயற்சியால் தான் மாணவர்கள் தங்களின் சமூக ஈடுபாட்டை நிரூபித்து உள்ளனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே கஜா புயலுக்கு இதே பேராசிரியரின் தலைமையில் சென்ற மாணவர்கள் 1.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.