டர்னர் அதிரடியில் வீழ்ந்தது இந்தியா…… 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆ.ஸி அசத்தல் வெற்றி…!!

இந்தியா VS ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 4_ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற்று அசத்தியுள்ளது .

இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மட்டும் T20 போட்டி தொடர்களை விளையாடி வருகின்றது . 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணியும் ,  3_ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்று  இந்திய அணி  2–1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.இந்நிலையில் இந்தியா , ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 4–வது ஒரு நாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது.

பகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . ஷிகர் தவான் மற்றும் ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழந்து  358 ரன்கள் எடுத்தது. இந்திய சார்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 143 ரன்களும் , ரோகித் சர்மா 95 ரன்களும் குவித்தனர் . ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஜெய ரிச்சர்டுசன் 3 விக்கெட்டும் விழ்த்தினர்.

இதனையடுத்து  359 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியினர் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர் .  ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 117 ரன்னும் , உஸ்மான் கவாஜா 91 ரன்னும் , ஆஸ்தன் டர்னர் 84 ரன்னும்  எடுத்து அசத்தினர் .  இந்திய அணி தரப்பில்  ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்களை  விழ்த்தினார் .  ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றியையடுத்து இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.