”துருக்கியில் படகு மூழ்கி விபத்து”….. குழந்தை உள்பட 7 பேர் பரிதாப பலி..!!!

துருக்கி நாட்டின், பலிகேசிர் மாகாணம் அருகே 16 குடியேறிகளுடன் வந்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியது. 

உள்நாட்டுப் போராலும், வறுமையாலும் சொந்த நாட்டை விட்டு தினந்தோறும் மக்கள் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக நுழைகின்னறனர்.  இந்த அகதிகள் ரப்பர் படகில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொள்வதாகவும், இவர்கள் செல்லும் சில படகுகள் நடுக்கடலிலேயே கவிழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.

Image result for படகுகள் நடுக்கடலிலேயே கவிழ்ந்துஇந்நிலையில், இன்று துருக்கி நாட்டில் உள்ள அயவலிக் மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட  கடல் பகுதியில் 16 அகதிகளுடன் வந்த ரப்பர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த  விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள். 4 பேரை தேடும் துருக்கி கடலோர காவல்படை 5 பேரை உயிருடன் மீட்டுள்ளது.