ஈராக்கில் பொழிந்த குண்டு மழை… துருக்கி இராணுவத்தின் அதிரடியால்… 23 நபர்கள் உயிரிழப்பு…!!!

ஈராக் நாட்டில் துருக்கி படையினர் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 23 குர்தீஸ் தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக்கின் வடபகுதியில் இருக்கும் பல நகர்களை குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இதனை ஆண்டு வரும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை, துருக்கி, தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. மேலும் அந்த இயக்கத்திற்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஈராக் நாட்டின் வடபகுதியில் இருக்கும் அசோஸ் என்ற குர்திஸ் பிராந்தியத்திற்குள் துருக்கியின் போர் விமானங்கள் புகுந்து வான்வழி தாக்குதல் மேற்கொண்டனர். துருக்கி ராணுவத்தினர் இது குறித்து தெரிவித்ததாவது, குர்திஸ் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து எப் 16 வகை போர் விமானங்கள் வெடிகுண்டுகளை வீசின. இதில் தீவிரவாதிகள் 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.