கோடைகாலத்தில் வெளியாகும் “தும்பா” திரைப்படம்…!!

தர்ஷன் நடிப்பில் உருவாகும் ‘தும்பா’ திரைப்படத்தை  கோடைகால விடுமுறையில் வெளியிட தயாரிப்பாளர்  திட்டமிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள  ‘தும்பா’ படத்தின் வேலைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. பேண்டசி அட்வெஞ்சர் வகையில் உருவாகும் இந்த ‘தும்பா’ படத்தில் கனா தர்ஷன் மற்றும் இவருக்கு ஜோடியாக  கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளனர். ‘தும்பா’ படத்தின் வேலைகள்  இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் தயாரிப்பாளர் இறங்கியுள்ளார்.

மேலும் இந்த படத்தை வெளியிடுவதற்கான  உரிமையை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் (KJR)  கைப்பற்றியுள்ளது.. இந்த நிறுவனம் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தை தமிழில் வெளியிட்டு வெற்றி பெற்ற்றுள்ளது.  இதனால் தங்களுடைய படமும்   நல்ல வெற்றிபடமாக  அமையும் என எதிர்பார்க்கின்றனர். ‘தும்பா’ திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *