“ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து நிற்போம்” டி.டி.வி தினகரன்..!!

 அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன், ஜெயலலிதா கற்று தந்த துணிவோடு ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து நிற்போம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  

நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று  வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது.  தமிழகத்தை  பொறுத்தவரையில் மக்களவை தொகுதியில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 1 தொகுதிகள் மட்டுமே வென்றுள்ளது. 22 சட்ட மன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதியும், அதிமுக 09 தொகுதிகளும் முன்னிலையில் உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அ.ம.மு.க இதர கட்சியான ம.நீ.ம, நாம் தமிழர், கட்சியை விடவும் பின் தங்கியுள்ளது. அதிமுக வாக்குகளை அ.ம.மு.க பிரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதியையும்  கைப்பற்ற முடியாதது மிகப்பெரிய பின்னடைவாகும்.

Related image

இந்நிலையில் இதுகுறித்து அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் ட்விட்டரில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறோம். தேர்தலில் வெற்றி- தோல்வி இயல்பானது தான். இரவு, பகல் என பாராமல் உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், கழகத்திற்கு வாக்களித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். ஜெயலலிதா கற்று தந்த துணிவோடு மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையை போல எழுந்து நிற்போம். தூய்மையாக மக்களின் மனதை வென்றெடுக்க முழுமையாக பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைக்காக அமமுகவின் குரல் எப்போதும் போலவே ஓங்கி ஒலித்திடும்” என்று தினகரன் பதிவிட்டுள்ளார்.