பதறுவதைப்பார்த்தல் சந்தேகம் எழுகிறது ….. பொள்ளாச்சி சம்பவத்திற்கு TTV தினகரன் கண்டனம்…!!

பாலியல் சம்பவத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பதறுவதைப்பார்த்தல் சந்தேகம் எழுகின்றது என்று அமமுக துணை பொதுச் செயலாளர் TTV.தினகரன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது .

இந்நிலையில் இன்று பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் சசிகலாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் TTV .தினகரன் பேசுகையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் .இதில் இருக்கும் குற்றவாளிகள் தப்பித்து கூடாது என்று தெளிவாக இருப்போம்  .தவறை யார் செய்தாலும் தண்டிக்க பட வேண்டும் . பொள்ளாச்சி ஜெயராமன் பதறிக்கொண்டு பேசுவதைப் பார்த்தல்  ஒரு சந்தேகம் இருக்கிறது . மேலும் இந்த போராட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆதரவு உண்டு என்று TTV. தினகரன் தெரிவித்துள்ளார்.