“பழையபடி 23 மொழிகளில் தேர்வுகளை நடத்த வேண்டும்” மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த டிடிவி..!!

இனிமேல் இந்தி,ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததற்கு அ.ம.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார் 

மத்திய அரசு தபால்துறை தேர்வுகளில்  இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். இந்த இரண்டு மொழிகள் தவிர இனி தமிழ் உட்பட வேறு மொழிகளில்  வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது. அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Image result for டிடிவி தினகரன்

இந்நிலையில் அம்மா முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், அஞ்சல் துறையில் வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் இனிமேல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் இருப்பவர்கள் அஞ்சல் துறை வேலை வாய்ப்புகளைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.

Related image

மேலும் தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் அஞ்சல் துறை வேலை வாய்ப்பிற்காக முயற்சிப்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக இது அமைந்து விடும். எனவே இந்திய அஞ்சல் துறை ஏற்கனவே அறிவித்திருந்தபடி 23 மாநில மொழிகளிலும் பணியாளர் தேர்வுக்கான தேர்வுகளை நடத்த வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்ற சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.