“பரிசுப்பெட்டி எடுபடாது” TTV வேட்பாளர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள்…. அமைச்சர் ஜெயக்குமார் கருத்து…!!

பரிசுப்பெட்டி சின்னம் மக்களிடம் எடுபடாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பரிசுபெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்காத நிலையில் , அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுவான சின்னமாக பரிசுப்பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெறுவோம் என அமமுக வினர் தெரிவித்துள்ளனர்.

பரிசுப்பெட்டி க்கான பட முடிவு

இந்நிலையில் இது குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில் , பரிசுபெட்டி சின்னம் மக்களிடம் எடுபடாது  கடந்த ஆர் கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று தமிழகத்தில் மக்களை ஏமாற்றிவிட்டார். அதே போன்று வெற்றி பெறும் நிலை தொடராது. இந்த பரிசுபெட்டி சின்னம் மக்களிடம் எடுபடாது. நோட்டாவுக்கு கீழ் செல்லாமல் இருந்தால் சரி டிவியின் வேட்பாளர் மக்களால் தவிர்க்க வேண்டியவர்கள் என அமைச்சர் தெரிவித்தார் .