எ.டி.எம் யில் திருட முயற்சி … மாமியார் வீட்டுக்கு சென்ற சிறுவன் ..!!

செங்கல்பட்டு அருகே ஏடிஎம்யில்  கொள்ளை அடிக்க முயன்ற சிறுவனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அதிகாலை 4 மணியளவில் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் கள்ளச்சாவி மற்றும் கடப்பாரையை கொண்டு திருட முயற்சித்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக ஏடிஎம் அருகே இருந்த அலாரம் அடித்தது . அதனால் , அதிகாலையில் ரயில் நிலையத்திற்கு  சென்ற பொதுமக்கள் சிறுவனை பிடித்து மறைமலை நகர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

Related image

அதற்குமுன் அதிகாலையில் இதே சாலையில் உள்ள ஜே.கே சூப்பர் மார்க்கெட் கதவுகளை கடப்பாரை கொண்டு உடைத்து திருட முயன்றுள்ளான் . அப்போது உள்ளே கண்ணாடிக் கதவுகள் இருந்தால் அதனை உடைத்தால் சத்தம் அதிகமாக கேட்கும் என எண்ணி அருகில் உள்ள ஏடிஎம்மில் சிறுவன் திருட முயன்றுள்ளான் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது .  மேலும் கைதான சிறுவன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதால் காவல்துறையினர் அவனிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.