“பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்” ஏ.டி.எம் மையத்தில் காத்திருந்த அதிர்ச்சி…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!!

ஏ.டி.எம் மையத்தை உடைத்து மர்ம நபர்கள் பணம் திருட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் பிரபல தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு நுழைந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பணத்தை திருட முடியவில்லை. எனவே அவர்கள் பணம் திருடும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து வாடிக்கையாளர் ஒருவர் அந்த ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது எந்திரம் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சங்கர் நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கொள்ளை முயற்சி நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *