இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்…. கொரோனா மருந்து கேட்டு மிரட்டும் டிரம்ப் ..!!

கொரோனா மருந்து கேட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை மிரட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 13 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளன. 74 ஆயிரத்து 644 பேர் மாண்டுள்ளனர். 2 லட்சத்து 78 ஆயிரத்து 413 பேர் வைரஸ் தாக்கத்திலிருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 425 ஆக ...

சீனாவில் பரவிய தொடங்கிய இந்த வைரஸ் தற்போது ஐரோப்பாவை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். உலகளவில் அதிகம் கொரோனா  பாதித்த நாடுகளின் பட்டியலில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் 30 ஆயிரத்துக்கும் கொரோனா அதிகமான பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 906 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா 2 லட்சம் முக கவசங்களை ...

அதேபோல நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் 1,252 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு இந்திய பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் உரையாடியபோது கொரோனா சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உட்பட மருத்துவ பொருட்களை அமெரிக்காவுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அமெரிக்க அதிபர் மீதான நம்பிக்கை ...

இந்திய நாட்டிற்கு உள்நாட்டு தேவை என்பதால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு இந்தியா தடை விதித்திருந்தது. இதனால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் இது குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

கொரோனா வைரஸ்- அமெரிக்க அதிபர் ...

அதற்கு பதில் அளித்த டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் பேசினேன். ஆடர் செய்த மருந்துகளை நாங்கள் பெறுவதற்கு அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும். ஒரு வேளை மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதி வழங்கவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கலாம் என்று எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *