ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடில் மோடி சந்திப்பை எதிர் நோக்கியுள்ளேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நாளை ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை ஜப்பானின் ஒசாகா நகர் சென்றடைந்தார்.

இதில் பல்வேறு நாட்டின் தலைவர்கள் பங்கேற்க இருப்பதால் பிரதமர் மோடியுடன் அதிகமான தலைவர்கள் பேச வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வருகைதந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இது குறித்து டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் பிரதமர் மோடி சந்திப்பை எதிர் நோக்கியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.ஏற்கனவே ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை பிரதமர் மோடி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.