அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரத்தை துவங்கினார் டிரம்ப்..!!

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப்  ஒர்லாண்டோவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கினார்.

அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். இதன்படி, டொனால்டு டிரம்ப் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு, ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி  வெற்றி பெற்றார். இந்த வெற்றியினால் அமெரிக்காவின் 45-வதுஅதிபராக டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார்.

Image result for Trump launches campaign for US presidential election

சமீபத்தில் அதிபர் டிரம்ப் தான் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். இந்த  நிலையில், அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3 -ஆம் தேதி நடைற இருக்கும் அதிபர் தேர்தலுக்காக டொனால்டு டிரம்ப் ஒரு வருடத்திற்கு முன்னதாகவே புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் இன்று முறைப்படி பிரசாரத்தை துவங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *