டிரம்ப் ஆட்சியை அகற்ற சபதம் ஏற்போம்…!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான ஆட்சியை தூக்கி எறிவோம் என துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ருத் பேடர் கிங்ரர்ட் மரணம் அடைந்ததை அடுத்து புதிய நீதிபதியாக ஆலிகோனி ஃபேடட் என்பவரை அதிபர் டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இதற்கு எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை அடுத்து நீதிபதி நியமனம் தொடர்பாக முடிவெடுக்க செனட் நிதிக்குழு கூட்டம் வரும் பனிரெண்டில் கூட உள்ளது. இக்குழுவின்  உறுப்பினராக கமலா ஹாரிஸ் உள்ளார்.

இன்னிலையில் வடக்கு கரண்டநாவில் ஷா பல்கலைக்கழகில் கமலா ஹாரிஸ் பேசியபோது அமெரிக்க மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் நீதிமன்றத்துக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதிபர் டிரம்ப் அவசரமாக உச்சநீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அதிபர் தேர்தலுக்கு பின் அமையும் அரசு செய்ய வேண்டிய பணியை இப்போதே செய்ய ட்ரம்ப் துடிக்கிறார் என அவர் விமர்சித்துள்ளார்.

ஆனால் தேர்தலுக்கு முன் நீதிபதியை நியமிக்க செனட் குழு அனுமதிக்காது என கமலா ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் தன்  மோசமான செயல்பாடுகளால் ஆட்சியையும் நாடாளுமன்றம் மாண்பையும் பாலாக்கி விட்டார் என கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார். இனி அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ட்ரம்ப் ஆட்சியை அகற்றுவோம் என சபதம் ஏற்போம் எனவும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *