“கணவன் இறந்த சோகம் தாங்காமல்  உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி “கண்ணை கலங்க வைத்த உண்மை காதல் !!…

தஞ்சை மாவட்டத்தில் கணவன் இறந்த சோகம் தாங்காமல் மனைவி  உயிரை மாய்த்துக் கொண்ட  சம்பவம் அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்துள்ளது 

தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியில் வசித்து வந்தவர்   மணி இவரது வயது 81. இவர் நெசவு தொழிலாளி ஆவார் . இவரது மனைவி லட்சுமி வயது 71 இவர்களது மகன் கார்த்திகேயன் வயது 45 கணவன் மனைவி இருவருமே நெசவு தொழிலாளிகள் ஆவார்கள்.

இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மணி நேற்றைய தினம் உயிரிழந்தார் . இதனையடுத்து இன்று மாலை மணி உடலுக்கு இறுதி சடங்குகள் சம்பிரதாயங்கள் என அனைத்தையும் முடித்துவிட்டு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்காக தயார் நிலையில் இருந்தனர். அதன் பின் இறுதி ஊர்வலம் தாரை தப்பட்டையுடன் புறப்பட்ட போது ஆழ்ந்த துக்கத்தில் இருந்த லட்சுமி, திடீரென மயங்கி  விழுந்தார். இதனால் அருகில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்து, லட்சுமி முகத்தில் தண்ணீர் தெளித்தனர். ஆனால் துரதிஸ்ட விதமாக அவர் இறந்து விட்டார்

கணவர் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் மனைவியும் இறந்து போன சம்பவம் இறுதிச்சடங்கிற்கு வந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது

காலங்கள் ஓடினாலும் வயதாகினாலும் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள உண்மை காதல் ஒருபோதும் துளியளவுகூட குறையாது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும் இந்த சம்பவம் அமைந்துள்ளது