பைக் மீது லாரி மோதல்..! பள்ளி மாணவன் பரிதாபம்…!!

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில்  11’ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் புதுப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய  மகன் பிரதீப்குமார் பதினேழு வயதான  இவர் ஒத்தஅள்ளி அரசு பள்ளியில் 11’ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி மாணவன் பிரதீப்குமார் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில்  காரிமங்கலம் டவுணில்  இருந்து சர்வீஸ்ரோடு வழியாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்ற போது எதிரெ வந்த கனரக வாகனம் ஓட்டுனரின் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பள்ளி மாணவன்  பிரதீப்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனம்  மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவன்  தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்  சம்பவம் குறித்து தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விபத்தில் பலியான பள்ளி மாணவன் பிரதீப்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவன் சாலை விபத்தில் பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.