”திமுக MP_க்களுக்கு சிக்கல்” உடனே பதிலளியுங்கள்.. நீதிமன்றம் கெடுபிடி…!!

ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் ரவிக்குமார் , கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ் , மதிமுக கட்சியின் கணேசமூர்த்தி மற்றும் ஐஜேகே கட்சி பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று 4 பேரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தேர்தல் விதிகளின்படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர் அந்த கட்சியில் இருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது எனவும், இது சம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன்  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கின் விசாரணையில், கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் ஒரு கட்சியை சேர்ந்த ஒருவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என விதி இருந்தாலும் தேர்தல் அதிகாரி வேட்புமனுவில் ஏற்றுக் கொண்டால் அதை எதிர்த்து தேர்தல் வழக்கு மட்டுமே தொடர முடியும் என்றும் , இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் திமுக அதிமுக மற்றும் மற்ற கட்சி சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்பிக்கள் வருகின்ற நவம்பர் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் திமுக கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.