திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் 2023…. “மும்முனை போட்டி”…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திரிபுராவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பிப்ரவரி 16-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 2-ம் தேதி மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

60 உறுப்பினர்களைக் கொண்ட திரிபுராவில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள், தற்போதைய பாஜக, இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியான திப்ரா மோதாவுக்கும், அரச வாரிசு பிரத்யோத் மாணிக்ய டெபர்மா தலைமையிலான கட்சிக்கும் இடையே மும்முனை போட்டியாக மாறியுள்ளது