உடலுக்கு குளிர்ச்சியை தரும் டிரிப்பிள் கூல் ஜூஸ்!

டிரிப்பிள் கூல் வெயில் காலத்துக்கு மிகவும் ஏற்ற பானம் இது. இதில் தர்பூசணி, பப்பாளி, ஸ்டாபெர்ரி உள்ளிட்டவை சேர்ப்பதால் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். புத்துணர்ச்சி அளிக்க கூடியது.

உடல் சூட்டைக் குறைத்து கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. வெயில் காலத்தை இதுபோன்ற ஆரோக்கியமான பானங்களை குடிங்கள்.

தேவையான பொருட்கள் :

விதை நீக்கிய தர்பூசணி – 1 கப்,
விதை நீக்கிய பப்பாளி – 1 கப்,
ஸ்டாபெர்ரி – 1 கப்,
தேன் – 1 ஸ்பூன்,
புதினா – 1/4 கப்.

செய்முறை :

தர்பூசணி, விதை நீக்கிய பப்பாளி, ஸ்டாபெர்ரி மூன்றையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதனை வடிகட்டி தேன் கலந்து கொள்ளுங்கள். ஐஸ் சேர்த்து, புதினாவை சிறிதாக நறுக்கி இந்த ஜூஸில் கலக்கவும். கிளாஸில் ஊற்றிப் பரிமாற வேண்டும்.