“அமித்ஷா ஒரு பொய்யர்” பதிலடி கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ்.!!

கொல்கத்தா நகரில் நடந்த வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் காரணம் என்ற அமித்ஷாவின் குற்றசாட்டுக்கு அக்கட்சி மறுப்பை தெரிவித்துள்ளது.   

கொல்கத்தாவில்  நேற்று  மாலை பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார். கொல்கத்தா  பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா கல்லூரி சாலைக்குள் பேரணியுடன்  நுழைந்தபோது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது.  இதையடுத்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தியதால்  கூட்டம் கலைந்து சென்றது. இதையடுத்து அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது. இந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்த  மம்தா, பாஜக வெளியில் இருந்து குண்டர்களை வரவழைத்து  வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக கடுமையாக சாடினார்.

Image result for The bust of Ishwar Chandra Vidyasagar

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, கொல்கத்தாவில் நடந்த  வன்முறைக்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே தவிர  பாஜக அல்ல என்று தெரிவித்தார்.   திரிணாமுல் காங்கிரஸ் 42 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. ஆனால் பாஜக அனைத்து மாநிலங்களிலும் போட்டியிடுகிறது. ஆனால், எங்கும் வன்முறை நடந்தது இல்லை. ஆனால், நேற்று மேற்கு வங்காளத்தில் மட்டும் வன்முறை நடந்துள்ளது.

Image result for The bust of Ishwar Chandra Vidyasagar

 

இந்த வன்முறை மூலம் அனுதாபம் பெறுவதற்காகவே தத்துவ மேதை வித்யாசாகர் சிலையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்களே சேதப்படுத்தியுள்ளனர். சி.ஆர்.பி.எப் வீரர்கள் மட்டும் வரவில்லையென்றால் நான் காயம்படாமல் உயிருடன் தப்பியிருக்க முடியாது. மேற்கு வங்காளத்தில் நடைபெறும் வன்முறை குறித்து தேர்தல் ஆணையம் மெளனம்  காத்து வருகிறது. குற்றத்திற்கு காரணமானவர்கள்  தேர்தலுக்கு முன்பாக கைது செய்யப்படவில்லை. தேர்தல் கமிஷன் இரட்டை நிலைப்பாட்டுடன் நடந்து கொள்கிறது” என்றார். மேலும் வன்முறை தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டார் அமித்ஷா.

Image result for The bust of Ishwar Chandra Vidyasagar

அமித்ஷாவின் இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்தது.  பா.ஜனதா தன்னுடைய செயல்பாடுகளை நியாயமெனக் கூறிக்கொள்ள முயற்சி செய்கிறது என்று அக்கட்சியின் எம்.பி. தெரிக் ஒ பிரையன் கூறியுள்ளார். பா.ஜக.வினர்  தான் வன்முறையில் ஈடுபட்டதுமில்லாமல்  வித்யாசாகர் சிலையையும்  உடைத்தனர். சிலையை உடைத்தது. பா.ஜனதாவினர் தான் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளது. வீடியோ உண்மையை விளக்குவதுடன், அமித்ஷா ஒரு பொய்யர் என்பதை நிரூபிக்கிறது என கூறியுள்ளார் தெரிக் ஒ பிரையன்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *