திருச்சி லைஃப் கேர் சென்டருக்கு சீல் …மாவட்ட நிர்வாகம் அதிரடி ….

 திருச்சியில், லைஃப் கேர் சென்டர் என்ற குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் ,  காவலர்  உயிரிழந்த   மர்ம சம்பவத்தால் அம்மையத்திற்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி கே.கே.நகரில் உள்ள  லைஃப் கேர் சென்டர் மையத்தில், கடலூரைச் சேர்ந்த  தமிழ்ச்செல்வன் காவலராக பணிபுரிந்துவந்தார் . இந்நிலையில் மர்மமான முறையில் அவர் திடீரென  உயிரிழந்தார். ஆனால் பிரேத பரிசோதனையில்  அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் , போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சீல்வைப்பு பூட்டு க்கான பட முடிவு

அதனால் ,அரசு மருத்துவர்கள் குழு ஆய்வு செய்து , சுகாதாரத்துறையிடம் ஆய்வறிக்கை ஒப்படைக்கப்பட்டது அத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் லைஃப் கேர் மையத்துக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது .