செம…. திருச்சி மருமகளாகும் முன்னணி நடிகை…. கொண்டாடித் தீர்க்கும் மக்கள்….!!!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Director vignesh shivan shares secret photo of nayanthara in social media  goes viral | Insta viral: விக்னேஷ் சிவன் பகிர்ந்த நயன்தாராவுடனான சூப்பர்  புகைப்படம்| Movies News in Tamil

இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில், வருகிற ஜூன் மாதம் இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, திருச்சி லால்குடியை சேர்ந்தவர்கள் சிவக்கொழுந்து – மீனாகுமாரி தம்பதியினர். இவர்களின் மகன் தான் விக்னேஷ் சிவன். எனவே திருச்சி மக்கள் நயன்தாராவை தங்கள் ஊர் மருமகளாக கூறி கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *