“முதல்வராகிய ஜெகன்மோகன்” இந்தியளவில் ட்ரெண்டிங்…..!!

ஆந்திர மாநில புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்றதையடுத்து ஹாஸ்டக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது.

நடைபெற்று முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று 12.30 மணிக்கு விஜயவாடா இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கும் ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் அதிரடி முடிவாக மது விலக்கு அமுல்படுத்தப்படுமென்று கூறியது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று ஜெகன்மோகன் ரெட்டி பதவி  ஏற்பு விழா நடைபெறுவதற்கு முன்பு Andhra Pradesh Chief Minister , CM of Andhra Pradesh என்ற இரண்டு ஹாஸ்டக் ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.