கடற்கரை ஓரத்தில் திருநங்கையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் கடற்கரை அமைந்துள்ளது. இங்கு 40 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மாமல்லபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் திருநங்கையின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருநங்கை கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.