“துரோகிகள் ஆட்சி” “டாடி மோடி , மோடியோட டாடி” வந்தாலும் காப்பாற்ற முடியாது…. TTV தினகரன் அதிரடி பேட்டி…!!

அதிமுக_வின் ஆட்சியை இவர்களின்  டாடி மோடி அல்லது மோடியின் டாடியோட டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று TTV தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக  SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. அமமுக_த்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுபெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

TTV தினகரன் பரிசு பெட்டி க்கான பட முடிவு

 

இந்நிலையில் ,காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் TTV.தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் , மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு பரிசுப்பெட்டி சின்னம் கிடைத்துள்ளது . 36 சின்னங்கள் அடங்கிய பட்டியலை அனுப்பியது.தாய் சேய் நல பெட்டகம் நினைவாக இந்த சின்னத்தை தேர்வு செய்தோம். சோதனை என்ற பெயரில் இரவு 1 மணிக்கு என்னுடைய அரசியல் சோதனை நடத்தி கீழ்த்தனமாக அரசு நடந்து கொண்டுள்ளது.

TTV தினகரன் பரிசு பெட்டி க்கான பட முடிவு

மேலும் அவர் கூறுகையில் , எங்களின் வெற்றியை யாரும் தடுக்க முடியாது. அடுத்த கட்டம் இவர்கள் என்ன செய்வார்கள் தேர்தலை நிறுத்த திட்டமிடுவார்கள். ஒரு 10 தொகுதியில் தேர்தலை நிறுத்த பார்ப்பார்கள். ஒரு எட்டு தொகுதியில் இவர்கள் வெற்றி பெறவில்லை என்றால் இவர்கள் ஆட்சியை காணாமல் போய்விடும். அவர்களின் டாடி மோடி வந்தாலும் மோடியின் டாடியோட டாடி வந்தாலும் ஆட்சியை காப்பாற்ற முடியாது. எனவே தேர்தலை நிறுத்த பார்ப்பார்கள். எங்களுடைய வேட்பாளர்களின் செலவு கணக்குகளை பார்த்துக் கொண்டிருப்பார்கள். துரோகிகள் கூட எங்களுடைய நோட்டீஸ் அடித்து  எங்களுடையகட்சியின் செலவு என்று சொல்லுவார்கள்.