புதுக்கோட்டையில் இருந்து திருவாரூர் வரை செல்லும் அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தை ரயில்வே ஆணையர் மனோகரன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை பகுதியில் இருந்த மீட்டர்கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு அதன் வழியாக காரைக்குடி மற்றும் புதுக்கோட்டையில் வாரத்திற்கு இரண்டு முறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து திருவாரூர் மாவட்டம் வரையிலான அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம் துவங்கப்பட்டது.

சோதனை ஓட்டம் தொடங்குவது முன்பாக ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதைகள், ரயில்வே சிக்னல்கள், இரயில்வே நிறுத்தங்கள் உள்ளிட்டவற்றை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ரயில் நிலைய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர். பின்னர் அதிவேக ரயில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.