கொரோனா பீதி.. ஏரியில் உயிருடன் வீசப்பட்ட பிராய்லர் கோழிகள்… கூட்டம் கூட்டமாக வந்து பிடித்து சென்ற மக்கள்!

இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்துள்ள கீழ்குப்பம் மற்றும் உடையாமுத்தூர் ஏரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிராய்லர் கோழிகள் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தன. கொரோனா பீதியால் மர்ம நபர்கள் சிலர் வண்டியில் பிராய்லர் கோழிகளை ஏற்றி வந்து வீசி விட்டு சென்றுள்ளனர். இதில் சில கோழிகள் ஏரி பகுதியில் மயங்கிய நிலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது.

இதையடுத்து சாலையில் பிராய்லர் கோழிகள் சுற்றி திரிவதை பார்த்த அக்கம் பக்கத்தில் வசித்து வரும் மக்கள் வியப்படைந்து போய் விட்டனர். உடனடியாக அவர்கள் இன்றைக்கு சரியான வேட்டை என்று தங்களுக்கு தேவையான கோழிகளை போட்டி போட்டுகொண்டு பிடித்துச் சென்றனர்.

மேலும் இது குறித்து தகவல் கிடைத்ததும்,  உடையாமுத்தூர், குரும்பர் தெரு, மாங்குப்பம், புரத்தார்வட்டம் உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பிராய்லர் கோழிகளை பிடித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிராய்லர் கோழியால் கொரோனா பரவும் என்று வதந்தி பரவி வரும் மத்தியில் கூட்டம் கூட்டமாக வந்து மக்கள் பிடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.