பாரம் தாங்காமல் கவிழ்ந்த டிராக்டர்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாணி மேடு கிராமத்தில் இருந்து கரும்பு லோடுகளை ஏற்றி கொண்டு டிராக்டர் முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை சேஷாத்திரி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அய்யூர்அகரம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பாரம் தாங்காமல் டிராக்டர் நடுரோட்டிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மேலும் கரும்பு கட்டுகள் சரிந்து பின்னால் வந்த கார் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு வாகனம் மூலம் டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.