நடிகை டாப்ஸி நடிக்கும் ”டோபரா” திரைப்படம்…. அசத்தலான ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

”டோபரா” படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தாப்ஸி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் இவர் ”டோபரா” படத்தில் நடித்துள்ளார்.

ஏழை மாணவிக்கு ஐ-போன் அனுப்பிய பாலிவுட் நடிகை டாப்ஸி பன்னு..! | Movie News  in Tamil

கல்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பாவில் கல் குட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லண்டன் இந்திய திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் தாப்சி ஜெயம் ரவியுடன் இணைந்து ‘ஜன கண மன’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ”டோபரா” படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதி தியேட்டரில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *