தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகைகள்…. முதலிடத்தில் யார் தெரியுமா…..? இதோ நீங்களே பாருங்க….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக இருப்பவர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தற்போது டாப் 10 லிஸ்டில் இருக்கும் ஹீரோயின்கள் குறித்த விவரத்தை பார்க்கலாம். அதன்படி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பல வருடங்களாக ஜொலிக்கும் நயன்தாரா 10 கோடி ரூபாய் வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில், முதல் இடத்தில் இருக்கிறார். அதன் பிறகு நடிகை சமந்தா ஒரு படத்திற்கு அதிகபட்சமாக 8 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படும் நிலையில், 2-வது இடத்தில் இருக்கிறார்.

இதனையடுத்து நடிகைகள் திரிஷா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் ஆகியோர் ஒரு படத்திற்கு 4 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் ‌ ஒரு படத்திற்கு 3 கோடியும், நடிகைகள் சாய் பல்லவி, ஆண்ட்ரியா, நித்யா மேனன் ஆகியோர் ஒரு படத்திற்கு 2 கோடி ரூபாய் வரையும் சம்பளமாக வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் குறைந்த அளவில் படங்கள் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்த பிரியங்கா அருள் மோகன் ஒரு படத்திற்கு 1 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.