“இந்த கார்டு இருந்தா போதும்” பெட்ரோல் முதல் ஷாப்பிங் வரை அனைத்திலும் சிறப்பு சலுகை….. டாப் 8 பெனிபிட்ஸ்….!!

சரியான வழியில் பொறுப்பாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் அதிக நன்மைகள் பெறலாம், செலவும் குறையும் இது குறித்த விரிவான தகவலை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். 

கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்யும் எளிய வழி இருக்க செல்லும் இடமெல்லாம் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன ?பிளாஸ்டிக் கார்டு கைவசம் இருக்கையில் சில்லறையை எண்ணுவது, செக்  எழுதுவது இதெல்லாம் தேவையே இல்லை. உங்கள் கார்டை டிஜிட்டல் வாலட்டில் இணைத்துவிட்டால் கார்டை கூட நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

கிரெடிட் கார்டு பணம் செலுத்த மட்டுமல்ல. மின்சார கட்டணம், பஸ் கட்டணம் போன் பில் என பல்வேறு கட்டணங்களை கிரெடிட் கார்டு மூலம் நேரத்துக்கு தானாகவே கட்ட முடியும். இதனால் அபராதத்தையும், இணைப்பு துண்டிப்பையும்,  டென்ஷனையும் தவிர்க்கலாம்.

ஆன்லைன் மூலம் பெரும்பாலான சேவைகளுக்கு கட்டணம் செலுத்த கேஷ்  பரிமாற்றத்தை விட கிரெடிட் கார்டு சிறந்தது. உதாரணத்துக்கு விமான டிக்கெட் முன்பதிவு, மொபைல் ரீசார்ஜ் போன்றவற்றை கேஷ் ஆன் டெலிவரி மூலம் உங்களால் செய்யவே முடியாது. ஆனால் கிரெடிட் கார்டு மூலம் செய்யலாம் மிகவும் பாதுகாப்பானதும் கூட.

பொருள் அல்லது சேவையை வாங்கியது முதல் குறிப்பிட்ட நாட்களுக்கு (50 நாட்கள் வரை ) வங்கிகள் வட்டி அல்லது பிற கட்டணங்களை விதிப்பதில்லை. இப்போது பொருளை வாங்கி கொள் பிறகு பணம் தா என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

கிரெடிட் கார்டை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு பாயிண்டுகள் கிடைக்கும். இவற்றை சேர்த்து வைத்து ஏராளாமான பரிசுகள் வெல்லலாம்.  ஏன் விமான டிக்கெட் கூட வாங்கலாம்.

பெட்ரோல் போடுவது தொடங்கி, ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது வரை ஏராளமான கேஷ்பேக் ஆஃபர்கள் கிரெடிட் கார்டுக்கு வழங்கப்படுகிறது. அதிலும் கிரெடிட் கார்டுகளுக்கு சில நிறுவனங்கள் அதிக சலுகைகள் அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

பெரிய தொகையை பர்சில் வைத்துக் கொண்டு, எங்கே தொலைத்து விடுவோமோ,பிக்பாக்கெட் அடித்துவிடுவார்களோ என பயப்படத் தேவை இல்லை.  கார்டு தொலைந்து விட்டாலும், உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவித்து பழைய கார்டை பிளாக் செய்து புதிய கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

கிரெடிட் கார்ட் உங்கள் கிரடிட் ஸ்கோரை அதிகரிக்கும் தெரியுமா ? கிரெடிட் கார்டை பயன்படுத்துவது. சரியான நேரத்தில் பணம் கட்டி விடுவது உள்ளிட்டவை  உங்கள் கிரெடிட் ஸ்கோரை உயர்த்தும். இந்த ஸ்கோர்  அதிகமாக இருந்தால், உங்களுக்கு புதிதாக லோன் உள்ளிட்ட வசதிகள் சுலபமாக கிடைக்கும்.  கிரெடிட் கார்டுகளால்  மட்டுமே முடிந்த, பணம், செக்  போன்றவை வழங்க முடியாத பயன்களில் இது முக்கியமான ஒன்றாகும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *