டாப் – 10 கார் பட்டியல் வெளியீடு … மாஸ் காட்டிய மாருதி நிறுவனம் ..!!

டாப் 10 கார்களின் வருட விற்பனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளது. 

இந்த ஆண்டு  ஜூலை மாதக் கணக்கெடுப்பின்படி ,  கார்களின் ஒட்டுமொத்த விற்பனை  1.07 லட்சம் ஆகும் . ஆனால் ,  கடந்த ஆண்டு 1.35 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 21 சதவிதம் கார் விற்பனை குறைந்துள்ளது. இதில் , மாருதி நிறுவனம் ஜூலை மாதத்தில் 15,062 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்து உள்ளது . இதன்மூலம்  டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி வேகன் ஆர் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

Image result for டாப் 10 கார் பட்டியல்

மேலும், மாருதி செடன் டிசையர் கார்கள் விற்பனை 12,923 கார்கள் விற்பனை ஆகியுள்ளது .இந்த கார் கடந்த ஆண்டிற்கு பாதியளவே விற்பனை ஆகியுள்ளது .ஆகையால்இந்த ஆண்டு இந்த கார் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் , மாருதி சுவிப்ட் கார்கள் 3-வது இடத்தில் உள்ளது. இந்தக் கார் விற்பனை 12,677-ஆக இருக்கிறது. இது கடந்த ஆண்டு 19,993 கார்கள் விற்பனையாகியுள்ளது.

Image result for டாப் 10 கார் பட்டியல்

மேலும் , மாருதி ஆல்டோ  நான்காவது இடத்திலும்,  மாருதியின் பேலினோ கார்கள் 5-வது இடத்திலும், மாருதி ஈகோ கார்கள் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஹூண்டாய்  நிறுவனம்  7-வது இடத்த்தில் உள்ளது. அடுத்ததாக , மாருதி  எர்டிகா கார்கள் எட்டாவது இடத்திலும் உள்ளது. மேலும், ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் 9-வது இடத்திலும், மாருதியின் கிரெட்டா கார்கள் 10-வது இடத்திலும் உள்ளது.