இந்திய அளவில் டாப் 10 ஹீரோக்கள் லிஸ்டில் இடம் பெற்ற நாயகர்கள்….. முதலிடத்தில் யார் தெரியுமா…..? நீங்களே பாருங்க….!!!!!

தென்னிந்திய சினிமாவில் சமீபகாலமாகவே ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகிறது. ஆனால் பாலிவுட் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு போதிய அளவில் சமீப காலமாகவே வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்திய அளவில் டாப் 10 ஹீரோக்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த லிஸ்ட்டை Ormax நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் நடிகர் விஜய்யின் பெயர் தான் முதல் இடத்தில் இருக்கிறது. பல வருடங்களாக  நடிகர் விஜய்யை யாராலும் முந்த முடியவில்லை.

அதன்பிறகு 2-ம் இடத்தில் நடிகர் பிரபாசும், 3-ம் இடத்தில் ஜூனியர் என்டிஆரும், 4-ம் இடத்தில் அல்லு அர்ஜுனும், 5-ம் இடத்தில் அக்ஷய் குமாரும், 6-ம் இடத்தில் நடிகர் அஜித்தும், 7-ம் இடத்தில் நடிகர் சூர்யாவும், 8-ம் இடத்தில் கேஜிஎஃப் நாயகன் யஷ், 9-ம் இடத்தில் நடிகர் ராம் சரணும், 10-ம் இடத்தில் நடிகர் மகேஷ்பாபுவும் இடம்பெற்றுள்ளனர். மேலும் லிஸ்டில் உள்ள 9 இடத்திலும் தென்னிந்திய நடிகர்களின் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், பாலிவுட் ஹீரோவில் ஒரே ஒரு நடிகர் மட்டும்தான் லிஸ்டில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply