” டோனி இப்போதைக்கு ஓய்வு இல்லை ” பிசிசிஐ அதிகாரி பேட்டி …!!

டோனி கிரிக்கெட்டில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெற போவதில்லை என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியுடன் மோதிய அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய அணியின் உலகக்கோப்பை தொடர் முடிந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான சுற்றுப்பயண ஆட்டத்திற்கு தயாராகி வருகின்றது. உலகக்கோப்பை ஆட்டத்தொடரில் கடும் விமர்சனத்துக்கு ஆளான டோனியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு இந்த தொடர் வீரர்கள் தேர்வு ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

Image result for bcci vs dhoni

இந்நிலையில்  பிசிசிஐ அதிகாரி ஒருவர்  செய்தியாளர்களிடம் கூறுகையில் , டோனி கிரிக்கெட்டில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை. அவர் இதற்க்கு முன்பு செய்த தன்னுடைய துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய இரண்டு மாதம் ஓய்வு எடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே டோனியின் நெருங்கிய நண்பர் அருண் பாண்டே_யும் டோனியிடம் ஓய்வு குறித்த எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.