டோக்கியோ ஒலிம்பிக் : நியூசிலாந்தை வீழ்த்தி …. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி …!!!

நியூசிலாந்து அணியை வீழ்த்தி  3-2 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை நடந்த ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் நியூசிலாந்து  தனது முதல் கோலை பதிவு செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 10-வது நிமிடத்தில் இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் முதல் கோலை அடிக்க , 1-1 என்ற கோல் இரு அணிகளும் சமனில் இருந்தது. இதையடுத்து 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கத்தை செலுத்தினர்.

அப்போது 26-வது நிமிடத்தில் இந்திய அணியில் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து 3-வது கால் இறுதி      ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் சிங்  26-வது நிமிடத்தில்  மீண்டும் ஒரு கோலை அடிக்க , அடுத்த நிமிடத்திலேயே நியூசிலாந்து அணியும் ஒரு கோல் அடித்தது. இதன்பிறகு  4-வது கால் இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இந்தியா 3-2 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *