இன்றைய ராசி பலன்….!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் :

 

விரயங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ள நாள். விருப்ப ஓய்வு பற்றிச் யோசிப்பீர்கள் . உத்தியோக மாற்றங்களைச் செய்யும் எண்ணம் ஏற்படலாம். அலைச்சல்கள் ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் காரியங்கள் கை கூடலாம்.

ரிஷபம் :

வீடு தேடி இனிய தகவல் வந்து சேரும் நாள்.  நீங்கள் எதிர்பார்த்தவர் உங்களை தொடர்பு கொண்டு பேசலாம். வங்கிச் சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

மிதுனம் :

உற்சாகத்தோடு  செயல்பட்டு தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொல்லை தந்தவர்கள் உங்களை விட்டு விலகுவர். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் மீண்டும்  தொடரும் எண்ணம் உருவாகும். அரசியல்வாதிகளால் பயன் ஏற்படும்.

கடகம் : 

பிரச்சினைகளிலில் இருந்து விடுபடும் நாள். உடல் ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செய்தொழிலில் மேன்மையும் , பயனும் கிட்டும். வாங்கல்– கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முயற்சிப்பீர்.

சிம்மம் : 

நல்ல செயல்களின் வெற்றிக்கு கடவுளை வழிபட வேண்டிய நாள்.உங்களுக்கான  வரவு வருவதற்கு முன்பு செலவுகள் காத்திருக்கும். திடமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உங்களின் பயணங்கள் மன உளைச்சல் தருவதாக இருக்கும்.

கன்னி : 

உங்களுக்கான புகழ் பெருகும் நாள். வரன்கள் வாசல் வரை தேடி வந்து சேரும். உங்களின் நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வருவர். நவீனப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் கொள்வீர்கள். உறவினர்களின் வருகை உண்டு.

துலாம் :

பணத்தேவைகள் நிறைவடையும் நாள். உங்களுக்கு பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடன் பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் நிகழலாம்.

விருச்சிகம் : 

உங்களை வியக்கவைக்கும் செய்தி வீடு தேடி வரும் நாள். நீங்கள் விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து கொள்வீர்கள். உங்களின் வருமானம் திருப்தி தரும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் அதிக ஆர்வம் கொள்வீர்கள்.

தனுசு : 

உங்களின் வசதிகள் பெருகும் நாள். வருங்கால பயன் கருதி புதிய திட்டங்கள் உருவாக்குவார்கள். தாய்வழி உறவினர்களால் உதவிகள் வந்து சேரும். வெளி ஆட்களின் பழக்க வழக்கம் விரிவிடைய வாய்ப்புள்ளது.

மகரம் : 

சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். உடன்பிறப்புகளின் ஆதரவால் ஊக்கமடைவீர்கள். பாக பிரிவினைகள் , பஞ்சாயத்துக்கள் மூலமாக  நல்ல முடிவு கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக  பிற நண்பர்களை சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம் : 

குடும்பத்தின் சுமை அதிகரிக்கும்  நாள். கொடுக்கல் வாங்கல்கள் விவகாரங்களில் திருப்தி கிடைக்கும். வெளி ஆட்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் பிறருக்காக உங்களின் பொறுப்புச்சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை முறையாக வந்து சேரும்.

மீனம் : 

உணவுகளின் கவனம் செலுத்தி ஆரோக்கியத்தை மேலோங்க செய்யும் நாள். புதியவர்களிடம்  பழகும்பொழுது கூடுதல் கவனம் தேவை. திடீர் பயணத்தால் வழக்கமான பணிகளில் தொய்வு ஏற்படலாம்.