இன்றைய IPL போட்டி : ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதல்….!!

இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன 

12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி ஹைதராபாத்தில்  உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு  நடைபெறுகிறது.  இரண்டு அணிகளும் முதல் போட்டியில் தோற்றுள்ளது. சன்ரைசர்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர், கடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில்  சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினார். அதே போல் பேர்ஸ்டோ, விஜய் சங்கர், ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர்.கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத வில்லியம்சன் இந்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . பவுலிங்கில் சித்தார்த் கெளல், புவனேஷ்வர் குமார், சாகிப் அல் ஹாசன், சன்தீப் சர்மா, ரஷீத் கான் ஆகியோர் கூடுதல் சிறப்புடன்  செயல்பட்டால் எதிரணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜாஸ் பட்லர் கடந்த போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார். இந்த நிலையில் அஷ்வின் பந்து வீசும் போது ரன்னராக நின்ற பட்லர் சர்ச்சைக்குள்ளாக  “மன்கட்” முறையில் அஷ்வினால் ஆட்டமிழந்தார். மேலும்  பேட்டிங்கில் , ஸ்டீவ் ஸ்மித், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆகிய  வீரர்கள் அதிரடி காட்டினால் ராஜஸ்தான் அதிக ரன்களை குவிக்க முடியும். பவுலிங்கில் உனத்கட், குல்கர்னி, ஷ்ரேயஸ் கோபால், கெளதம், ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால் எதிரணியை குறைந்த ரன்னில் கட்டுப்படுத்த முடியும். இரு அணிகளும் முதல் வெற்றிக்கு போராடுவதால் போட்டி கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.