இன்றைய ( 24.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

24-01-2020, தை 10, வெள்ளிக்கிழமை,

அமாவாசை திதி பின் இரவு 03.12 வரை பின்பு வளர்பிறை பிரதமை.

உத்திராடம் நட்சத்திரம் பின் இரவு 02.46 வரை பின்பு திருவோணம்.

சித்தயோகம் பின் இரவு 02.46 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 0. ஜீவன் – 0. தை அமாவாசை.

திருக்கணித சனிப்பெயர்ச்சி காலை 09.57 மணிக்கு.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

மேஷம் :

இன்று  குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள்  நடைபெறும். பூர்வீக சொத்துக்களில் சாதகமான பலன் கிடைக்கும். உறவினர்கள் உங்கள்  தேவை அறிந்து உதவுவார்கள்.  தொழில் தொடர்பான கடன்கள் விரைவில்  கிடைக்கும். சுபமுயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும்.

ரிஷபம் :

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறிய  உபாதைகள் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறைய வாய்ப்புகள் உருவாகும். பெரியவர்களின்  நட்பு மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மிதுனம் : 

இன்று  ஆரோக்கியத்தில் சிறிய உபாதைகள் ஏற்படும் கவனம். உங்கள் ராசியில்  சந்திராஷ்டமம் நிலைப்பதால்  நீங்கள் செய்யும் செயலில்  தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பான   புதிய முயற்சிகளை  கைவிடுவது நல்லது. வெளியூர் செல்லும் பொழுது கவனம் தேவை. வீண் பேச்சை தவிர்ப்பது சிறந்தது.

கடகம் :

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள்  உங்களுக்கு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல  பலன்கள் ஏற்படும். திருமண தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். வேலையில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.

சிம்மம் :

இன்று  மன உளைச்சல்கள் குறைந்து நிம்மதி அதிகரிக்கும். உறவினர்கள்  உங்களுக்கு துணையாக இருப்பார்கள். செலவுகள் குறைந்து சேமிப்பு  பெருகும். உத்தியோகத்தில் சகா ஊழியர்களால் அனுகூலம் உண்டு. வியாபார தொடர்பாக கொடுக்கல் வாங்கல் நல்லாப்படியாக இருக்கும்.

கன்னி :

இன்று வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கலாம் .  உடன்பிறந்தவர்கள்  வழியில்  மனகவலை  ஏற்படும். புதிய பொருட்களை  வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயலாற்றுவது நல்லது. தொழிலில் பகைவர்களால்  இருந்த தொல்லைகள் நீங்கும். தெய்வீக  வழிபாடு நன்மை கொடுக்கும்.

துலாம் :

இன்று குடும்பத்தில் தேவையில்லாத  செலவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். பொறுப்புடன் நடந்து பணப் பிரச்சினைகளை தீர்க்கலாம். யாரையும் அனுசரித்து செல்வது ரொம்ப  நல்லது. எதிர்பார்த்த உதவிகள் விரைவில் கிடைக்கும்.

விருச்சிகம் : 

இன்று வியாபாரத்தில் புதிய நபர்களின்  அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் பெறுவீர்கள்.  சொத்து தொடர்பான  வழக்கில் சாதகமான பலன்கள் உண்டு. குடும்பத்தினருடன் தூர பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும்.

தனுசு : 

இன்று பிள்ளைகளால் தேவையற்ற  செலவுகள் செய்யும் சூழ்நிலை உருவாகும்.  வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும்.  உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது  நல்லது.

மகரம் : 

இன்று நீங்கள் வேலைகளை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இன்பமான சூழல் அதிகரிக்கும். பிள்ளைகள் இன்று  பொறுப்பு உணர்ந்து  நடந்து கொள்வார்கள். தொழிலில் எதிர்பார்த்த அளவு  லாபம் கிட்டும். குடும்பத்தில் சுபசெலவுகள் இருக்கும். பொருளாதார தொடர்பான நெரிசல் குறையும்.

கும்பம் : 

இன்று தொழிலில் எதிர்பாராத செலவுகள் இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு  நடுவே சிறிய வாக்குவாதங்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள்  வெற்றி தரும். நண்பர்களால் நன்மை  உண்டாகும். தேவைகள் நிவர்த்தியாகும்.

மீனம் : 

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் இருக்கும். வீட்டில்  பிள்ளைகளால்  ஏற்பட்ட மனகவலை குறையும். உறவினர்கள் மூலம்  சுபசெய்திகள் பெறுவீர்கள். தொழிலில் நண்பர்களின் ஆலோசனை நல்ல பலனை தரும். பெற்றோரின் அன்பும் கிட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *