போதை மாத்திரைகளுக்கு அடிமையாகும் இன்றைய தலைமுறை…..!!

நோய்களை குணப்படுத்தக்கூடிய மாத்திரைகளை இளம் தலைமுறையினர் போதைக்காக பயன்படுத்த தொடங்கியுள்ளனர் அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஒரு காலத்தில் போதைக்கு அடிமையானவர்கள் என்றால் மது மற்றும் புகைப்பழக்கம் என்றுமே அறியப்பட்டு வந்தது. தற்போது கஞ்சா , ஊசி என்பதைத் தாண்டி மாத்திரையின் பக்கம் இளம் தலைமுறையினர் திரும்பி உள்ளனர் என்பது அதிர்ச்சி தரும் உண்மை. சிறுவர்களும் , இளம்பெண்களும் மாத்திரைக்கு அடிமையாகி உள்ளது வேதனையானது மட்டுமல்ல ஆபத்தான விஷயமும் கூட,

தூக்கமின்மை உடல் உபாதைகளுக்கு நிவாரணம் அளிக்கும் வீரியமிக்க மாத்திரைகள் மருந்தகங்களில் விற்கப்படுகின்றன இந்த மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது என்பது விதி ஆனால் அதிகளவில் பணம் கிடைக்கிறது என்பதற்காக மருந்தகங்களில் ஒரு சில நபர்கள் உரிய பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளை விற்பனை செய்கின்றனர் இவ்வாறு விற்பனை செய்வது சட்டத்திற்குப் புறம்பானது என எச்சரிக்கின்றனர் மருந்தாக தரப்பினர்

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *