இன்றைய டயட் உணவு – கம்பு ரொட்டி!!!

கம்பு ரொட்டி

தேவையான  பொருட்கள் :

கம்பு மாவு   –  1 கப்

வெங்காயம் – 1

தக்காளி- 4

பச்சை மிளகாய் – 4

மஞ்சள்தூள் –  1 சிட்டிகை

எண்ணெய்  –  தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

கம்பு ரொட்டி க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் கம்பு மாவுடன்  உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு  கரைத்துக் கொள்ள  வேண்டும். பின் தோசைக்கல்லில் மாவை  ஊற்றி , ரொட்டிகளாக சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.  ரொட்டிகளைச்  சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி , மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி,  ரொட்டித் துண்டுகளை சேர்த்து கிளறி , கொத்தமல்லி தூவி இறக்கினால் கம்பு ரொட்டி  தயார் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *