இன்றைய டயட் உணவு – பருப்புக் கூட்டு!!!

பருப்புக் கூட்டு

தேவையான  பொருட்கள் :

பாசிப்பருப்பு  –  1 கப்

தக்காளி –  2

வெங்காயம் –  1

குடமிளகாய் –  1

பச்சை மிளகாய் – 2

சீரகம் – 1/2  டீஸ்பூன்

பூண்டு – 4 பல்

மஞ்சள்தூள் –  1 சிட்டிகை

உப்பு –  தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

பசி பருப்பு க்கான பட முடிவு

 

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை ஊற வைத்து அதனுடன்  மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்க  வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பூண்டு , வெங்காயம், பச்சை மிளகாய் , தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும். இவை வெந்த பின் , வேக வைத்த பருப்பைச் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பருப்புக் கூட்டு தயார் !!!