” இன்று வெறும் 6 வேட்பாளர்கள் ” இன்றோடு மொத்தம் 26 வேட்புமனு…..!!

இரண்டாம் நாள் வேட்புமனுதாக்கலான இன்று வெறும் 6 வேட்பாளர் மட்டும் நாடாளுமன்ற வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது பிரசாரம் நடைபெற்று வருகின்றது .

Image result for 26 வேட்புமனு

தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. இதில் பாராளுமன்றத்துக்கு போட்டியிட கூடியவர்கள் வேட்பாளர்கள் 25,000 ரூபாய் வேட்புமனு கட்டணமாக  செலுத்த வேண்டுமென்றும் , SC/ST வேட்பாளர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 12,500 ரூபாய் செலுத்த வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் வேட்புமனு தாக்கல் வருகின்ற 26_ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

Image result for 26 வேட்புமனு

இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு வேடங்களில் வந்து சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 20 வேட்பாளர்கள் வேட்புமனு  அளித்தனர். இரண்டாம் நாளான இன்று தொடக்கத்திலிருந்தே மந்தமான நிலையிலேயே வேட்புமனு தாக்கல் நடைபெற்றது . இன்று மட்டும் வெறும் 6 வேட்பாளர்கள் மட்டும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர் . அதோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 2 வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்கள் . தமிழகத்தில் இது வரை 26 பேர்  நாடாளுமன்றம் வேட்பாளர்களாகவும் ,  2 பேர்  சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களாக  வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர் .