இன்றைய ( 10.08.2019 ) ராசிப்பலன் …!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் :

இன்று உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுக்கு தேவையற்ற மனகுழப்பம் உண்டாகும். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வருவதற்கான வாய்ப்பு உண்டு. நீங்கள்  மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லதாக இருக்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.

ரிஷபம் :

இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை நல்லபடியாக நல்லபடியாக முடிப்பீர்கள். உங்களின் உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வரும். சிலருக்க்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். உங்களின் வியாபார கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக அமைந்து , பொருளாதார பிரச்சினைகள் விலகும் :

மிதுனம் :

இன்று உங்களின் சுபசெலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உங்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சினை நீங்கும். உங்களுடன் அலுவலகத்தில்  பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். இதனால் பணிச்சுமை குறையும். தொழில் சம்பந்தமான வெளியூர் தொடர்புக்கு வாய்ப்புள்ளது.

கடகம் :

இன்று உங்களின் உடலில் சோர்வும், மந்தமும் ஏற்படும். பிள்ளைகளுக்காக சிறு தொகைகளை  செலவிட நேரிடும்.நண்பர்களினால் வியாபார முன்னேற்றம் ஓரளவு இருக்கும். சிலருக்கு வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின்  வழியில் அனுகூலப்பலன்கள் கிடைக்கும்.

சிம்மம் :

இன்று உங்களின் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் ரீதியான வெளியூர் பயணத்தால் அலைச்சல் அதிகரித்து நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.

கன்னி :

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். உத்தியோகத்தால் முன்னேற்ற சூழ்நிலை உண்டாகும். திருமண முயற்சியில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றியை கொடுத்து , பொருளாதார தேவைகள் முழுமை பெறும்.

துலாம் :

இன்று நீங்கள் நினைக்கும் காரியத்தை நன்றாக செய்து முடிக்க உங்களுடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆடம்பரமான பொருட்கள் வாங்குவதில் கவனமுடன் இருங்கள்.உங்களின் பிள்ளைகளால் சிறிய சிறிய  மன கஷ்டங்கள் உண்டாகலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

விருச்சிகம் :

இன்று உங்களுக்கு நண்பர்களினால் அனுகூலமான பலன் உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்க வாய்ப்புள்ளது.உங்களுக்கு வர வேண்டிய  பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும்.

தனுசு : 

இன்று உங்களின் பிள்ளைகளால் வீண் செலவு உண்டாகும் . உங்களின் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானம் அவசியம். புதிதாக எடுக்கும் முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களை  அனுசரித்து சென்றால் அனுகூலப் பலனை பெறலாம்.

மகரம் :

இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக அமையும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் தகுதிக்கேற்ற சிலருக்கு பதவி உயர்வு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைப்பதோடு , நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்தடையும்.

கும்பம் :

இன்று உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பதவி  உயர்  கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த  எதிரிகள் இனி உங்களின் நண்பர்களாக செயல்படுவார்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.

மீனம் :

இன்று உங்களுக்கான பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் சற்று தாமதம் ஏற்படலாம். அலுவலகத்தில் உங்களுக்கு மேல் இருக்கும் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதால் வீண் பிரச்சினை தவிர்க்கப்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவும் ஒத்தழைப்பும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.