இன்றைய ( 08.08.2019 ) ராசிப்பலன் …!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் :

இன்று உங்களின் ஆரோக்கியத்திற்காக மருத்துவ செலவு செய்ய நேரிடும் வணிகத்தில் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் உங்களுடைய ராசிக்கு பகல் 3.25 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானத்துடன் செயல்படுங்கள். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது

ரிஷபம் :

இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் உங்களுக்கு சாதகமாக இருப்ப்பார்கள். வியாபாரத்தில் ஏற்றம் அடைவீர். தொழில் தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகளில் வெற்றி அடைவீர். நண்பர்களின் மூலம் இனிய செய்தி வந்து மன நிம்மதி ஏற்படும்.

மிதுனம் :

இன்று சிக்கனமாக இருப்பதால் உங்களின் கடன் குறையும். உடலில் லேசான தொய்வு ஏற்படும். தொழில் ரீதியிலான வெளியூர் தொடர்பு மூலம் பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். இன்று கடவுள் வழிபாடு நல்லது.

கடகம் :

உங்களுக்கு உறவினர்களால் வீண் சிக்கல் ஏற்படலாம். குழந்தைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். வேலையில் உங்களின் உயர் அதிகாரி மூலம் அனுகூலம் உண்டாகும்.பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை உண்டாக்கும். வியாபார ரீதியில் தொழில்ரீதியிலான கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுங்கள்.

சிம்மம் :

நீங்கள் அனைத்து காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த அரசு உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.தொழில் சம்பந்தமாக உபகரணம் வாங்கும் முயற்சியில் பலன் கிடைக்கும். இன்று உங்களின் சுபகாரிய பேச்சு தொடங்குவதற்கு நல்ல நாளாக அமையும்.

கன்னி :

உங்களுக்கு காலையிலேயே வியக்கக் கூடிய நல்ல செய்தி வரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருந்து ,  உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும் .உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு ஏற்படலாம். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வங்கி சேமிப்பு உயரும்.

துலாம் :

இன்று உங்களின் மனம் குழப்பமாகவும் , கவலையுடனும் காணப்படும். குடும்பத்தில் தேவையில்லாத சண்டை சச்சரவு ஏற்படலாம். குழந்தைகளால் நிம்மதி குறையும். மனநிம்மதி குறைந்து மனக்கஷ்டம் ஏற்படும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முடிவுகளில் நண்பர்களின் ஆதரவும் ,  ஒத்துழைப்பு கிடைத்து எதிர்பாராத உதவி பலன் கிடைக்கும்.

விருச்சகம் :

உங்களுக்கு பணம் வரவு கவலையின்றி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் சந்தோஷம் அடைவீர்கள். திருமண சுப நிகழ்ச்சிகளில் பலன் உண்டாகும் . உங்களுடன் பணியாற்றுபவர்கள்  ஒற்றுமையாக செயல்படுவார்கள். வர வேண்டிய கடன்கள் வசூலாகும்.

தனுசு :

உங்களின் வீட்டிற்கு புதிய பொருட்கள் வரும். குழந்தைகளால் சுப செய்தி கிடைக்கும்.பணியில் மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் உங்களுடன் இணைவதால் வருமானம் அதிகரிக்கும்.

மகரம் :

மன உறுதியோடு உங்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். தேவை இல்லாத  கருத்துக்களால் குடும்பத்தில் குழப்பம் , கருத்துவேறுபாடு தோன்றலாம். வாகனங்களால் வீண் செலவு ஏற்படும். உறவினர்களின் உதவி உங்களின் பிரச்சனையை குறைக்கும் . பொறுமையாக செயல்படுவது நல்லது.

கும்பம் :

உங்களின் உடல்நிலை சற்று சோர்வாக இருக்கும்.  உடலில் அசதி இருந்தாலும் , நீங்கள் எடுக்கும் காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். உங்களின் அசையா சொத்துக்களால் சிறிய அளவிலான விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதனால் அனுகூல பயனடைவீர்.

மீனம் :

உங்கள் ராசிக்கு பகல் 3 25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவரிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. இன்று நீங்கள் பலவீனமாக இருப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழல் உண்டாகும். மதியத்திற்கு பிறகு மன நிம்மதி கிடைக்கும்.