இன்று மட்டும் 2 மாவட்டம்..! ”காலி செய்த கொரோனா” பறிபோன கனவுகள் …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15ஆயிரத்தை நெருங்கிக்கொண்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே மிரட்டிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் பயத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.குறிப்பாக தமிழகமும், மகாராஷ்ராவும் கொரோனாவின் மையமாக இருக்கின்றது. தலைநகர் சென்னை எதிர்பார்க்கமுடைய அளவுக்கு பாதிப்பை சந்தித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 786 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் இன்றுவரை கொரோனா பாதிப்பு 14,753 பேருக்கு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மார்ச் 7ஆம் தேதி முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அடுத்து மார்ச் 14ஆம் தேதி மேலும் ஒருவருக்கு பேருக்கு தொற்று உறுதியாகியது.

மார்ச் 18, 20 என தலா 1 நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அடுத்தடுத்து என இன்றுவரை கிட்டத்தட்ட 76 நாட்களாக தமிழகத்தை கொரோனா மிரட்டிக்கொண்டு இருக்கின்றது. எப்போது கொரோனா குறையும், எப்போது கொரோனா இல்லா மாநிலம் ஆகும் என எதிர்பாத்துக்கொண்டு இருந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 37 மாவட்டங்களையும் விட்டு வைக்காமல் பதம் பார்த்து கொரோனா. அனைத்து மாவட்டமுமே எப்போது கொரோனாவில் இருந்து தப்பிப்போம் என்று தவித்து வந்தன.

அந்தவரிசையில், தூத்துக்குடி கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டு கொரோனா இல்லா மாவட்டமாக மகிழ்ச்சியை அனுப்படவித்து மீண்டும் கொரோனா பிடியில் சிக்கியது. அந்தவகையில் தான் கோவை, திருப்பூர், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருவாரூர் என 6 மாவட்டங்களில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அனைவரும் மீண்டு வீடு திரும்பியதால் இவை கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் தான் இன்றைய பாதிப்பு மாவட்டங்களின் மகிழ்ச்சியை தலைகீழாக புரட்டி போட்டது. அதுவும் ஈரோடு மாவட்டத்தில் 37 நாட்களுக்கு பின் இன்று ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு ஒருவருக்கு கொரோனா பாதித்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார். ஏற்கனவே 70 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தநிலையில் 69 பேரும் குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர்.

அதே போல திருவாரூர் மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கொரோனா உள்ள மாவட்டமாக மாறியது. மொத்தத்தில் இன்று ஒரே நாளில் இரண்டு மாவட்ட மக்களின் கொரோனா இல்லா மாவட்டம் என்ற கனவில் மண்ணை அள்ளிப்போட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *